என் மலர்
இந்தியா

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரியா? - மத்திய அரசு மறுப்பு
- விவசாயிகள் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய முடிவு என தகவல் வெளியானது.
- மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசின் நீர்வளத்துறை முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளது.
அந்த பதிவில், "விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல.
விவசாயிகளிடையே இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






