என் மலர்tooltip icon

    இந்தியா

    காதலை கைவிட மறுத்ததால் கொலை: தங்கை தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்து வந்த அண்ணன்
    X

    காதலை கைவிட மறுத்ததால் கொலை: தங்கை தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்து வந்த அண்ணன்

    • சந்த்பாபு வேறு மதத்தை சார்ந்தவர் என்பதால் காதலை கைவிடுமாறு ஆசி பாவிடம் ரியாஸ் கூறியுள்ளார்.
    • தங்கை என்றும் பாராமல் ஆசி பாவை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ரியாஸ் (24). இவரது தங்கை ஆசிபா (18). ஆசிபாவும் அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபுவும் காதலித்து வந்தனர்.

    சந்த்பாபு வேறு மதத்தை சார்ந்தவர் என்பதால் காதலை கைவிடுமாறு ஆசி பாவிடம் ரியாஸ் கூறியுள்ளார். ஆனால் ஆசிபா சந்த்பாபுவை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ் ஆசிபாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து தங்கை என்றும் பாராமல் ஆசி பாவை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் தலையை துண்டாக வெட்டி பையில் வைத்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றார்.

    அதற்குள் அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரியாசை கைது செய்தனர்.

    விசாரணையில் காதலை கைவிட மறுத்ததால் தங்கை ஆசிபாவை கொலை செய்ததாக ரியாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×