search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்:  10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
    X

    கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    • சபரிமலை கோவில் மற்றும் வனப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு மலையோர பகுதிகளுக்கு இரவு பயணத்தை தவிர்க்க அந்த மாவட்ட கலெக்டர் ஷிபு அறிவுறுத்திஉள்ளார்.

    திருவனந்தபுரம்:

    இலங்கை- தமிழகம் இடையே புயல் சுழற்சி வலுப்பெற்றதால் தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு கனமழையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்தாலும் திருவனந்தபுரம் மாவட்டம் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்கு கடுமையாக பெய்த மழையின் காராணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பார்வதி புத்தனாறு, பட்டம் கால்வாய்கள் நிரம்பியதால் தண்ணீர் மறுகால் பாய்ந்தது.

    தெக்கமூடு பண்ட் காலனி, கவுரீசப்பட்டம், முறிஞ்சாபாலம் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசிப்பவர்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் மின் தடையும் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    பத்தனம்திட்டா மாவட்டத்திலும் நேற்று கனமழை பெய்தது. அங்கு 2 மணி நேரத்தில் 210 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கோட்ட தட்டி, சென்னீர்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை கோவில் மற்றும் வனப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சபரிமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் அந்த பாதையில் செல்வதை தவிர்க்கவும், அவர்கள் பாதுகாப்பாக பயணிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சபரிமலையில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு மலையோர பகுதிகளுக்கு இரவு பயணத்தை தவிர்க்க அந்த மாவட்ட கலெக்டர் ஷிபு அறிவுறுத்திஉள்ளார். அதே நேரம் சபரிமலை பக்தர்கள் அல்லது யாத்திரை பயணங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 28-ந்தேதி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×