search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி அருகே நிலம் வாங்கியதால் பிரியங்கா கணவர் மீது குற்றச்சாட்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை
    X

    டெல்லி அருகே நிலம் வாங்கியதால் பிரியங்கா கணவர் மீது குற்றச்சாட்டு: அமலாக்கத்துறை நடவடிக்கை

    • தம்பிக்கு மிகவும் நெருக்கமான ராபா்ட் வதேரா, லண்டனின் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள பண்டாரியின் இல்லத்தைப் புதுப்பித்து பயன்படுத்தியுள்ளாா்.
    • முதல் முறையாக இந்த வழக்கில் வதேராவின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தொழில் அதிபர் சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காமல் மறைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரித்து வருகின்றன.

    கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது.

    இந்த நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபா் சி.சி.தம்பி, இங்கிலாந்தை சோ்ந்த சுமித் சத்தா ஆகியோருக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக தம்பி கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். தற்போது அவா் ஜாமினில் உள்ளாா்.

    சஞ்சய் பண்டாரி, லண்டனில் உள்ள சொத்துகள் உள்பட வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருவாயை மறைத்துள்ளாா். வழக்கில் தொடா்புடைய இந்தச் சொத்துகளை மறைக்க தம்பி, சுமித் சத்தா ஆகியோா் அவருக்கு உதவி உள்ளனா். தம்பிக்கு மிகவும் நெருக்கமான ராபா்ட் வதேரா, லண்டனின் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள பண்டாரியின் இல்லத்தைப் புதுப்பித்து பயன்படுத்தியுள்ளாா்.

    தம்பியும் ராபா்ட் வதேராவும் இணைந்து டெல்லிக்கு அருகே உள்ள பரீதாபாத்தில் நிலம் வாங்கியுள்ளனா். இருவருக்கும் இடையே பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் முறையாக இந்த வழக்கில் வதேராவின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், அக்குற்றச்சாட்டுகளை அவா் மறுத்திருந்தாா்.

    Next Story
    ×