search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சைவம் சாப்பிட தனி மேஜை ஒதுக்கியதை எதிர்த்து போராட்டம்- ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு அபராதம்
    X

    சைவம் சாப்பிட தனி மேஜை ஒதுக்கியதை எதிர்த்து போராட்டம்- ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு அபராதம்

    • சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.
    • ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    மும்பை:

    மும்பையில் உள்ள பவாய் ஐ.ஐ.டி. விடுதியில் சமீபத்தில் சைவ மாணவர்கள் மட்டும் உட்கார வேண்டும் என ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சையை அடுத்து அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 3 விடுதிகளில் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.

    இதை கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. இதுகுறித்து அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் எக்சில் வெளியிட்ட தகவலில்:- ஐ.ஐ.டி. பாம்பே அதன் உணவு பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது என கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    Next Story
    ×