என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு- இமாச்சல் முதல்வர் வரவேற்பு
Byமாலை மலர்19 Jun 2022 3:58 AM GMT
- அக்னிபாத் திட்டத்தை வரேவேற்று இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கருத்து.
- நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தை வரேவேற்று இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
அக்னிபாத் திட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் முடிவை வரவேற்கிறேன். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை வேறு திசையில் கொண்டு செல்ல முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்று நான் கருதுகிறேன். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
முழு நாடும் இந்த முடிவை வரவேற்கும் நிலையில், பெரிய அளவிலான இந்த வேலை வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி எப்போதும் இளைஞர்களைப் பற்றியே சிந்தித்து நல்லது செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×