search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு
    X

    ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு

    • ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
    • துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த தலைவர்கள் அடங்கிய கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜார்க்கண்ட் ஆளுநராக பணியாற்றிய ஒடிசாவைச் சேர்ந்த கட்சித் தலைவரான முர்முவின் வேட்புமனுவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி வேட்பாளர் முர்முவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க அதன் விஜபி பாதுகாப்புக் குழுவை அனுப்புமாறு மத்திய ரிசரவ் போலீஸ் படைக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து, ஒடிசாவை தளமாகக் கொண்ட துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். மேலும், நாட்டின் முதல் குடிமகனாக அவர் பொறுப்பேற்கும் வரை கமாண்டோ பாதுகாப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×