search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிமுக பொதுக்குழு வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அதிமுக பொதுக்குழு வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

    • சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டு அறிந்து வருகின்றனர்.
    • கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக யார் யார் இருந்தார்கள் என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டறிந்து பதிவு செய்து வருகின்றனர்.

    கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆகஸ்டு 25ம் தேதி விசாரித்தது.

    இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி அளித்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும்.

    இரு நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 2ம் தேதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவில்லை. எனவே இரு நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டு அறிந்தனர்.

    இந்த மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசரத்தை அறிய விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தானே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக யார் யார் இருந்தார்கள் என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டறிந்து பதிவு செய்து வருகின்றனர்.

    நீதிமன்ற விசாரணை காரணமாக கட்சிப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

    ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக 2021, டிசமர்பரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறப்பட்டது. மேலும், கட்சியின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றார்.

    Next Story
    ×