என் மலர்

  இந்தியா

  இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 535 பேருக்கு தொற்று
  X

  இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 535 பேருக்கு தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரத்து 404 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.

  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 552 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 535 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 88 ஆயிரத்து 426 ஆக உயர்ந்துள்ளது.

  தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரத்து 404 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 953 பேர் அடங்குவர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 6,168 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 423 குறைவு ஆகும்.

  தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.

  Next Story
  ×