என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 16,678 பேருக்கு கொரோனா
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 14,629 பேர் நலம் பெற்றுள்ளனர்.
- இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று புதிதாக 16,678 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 36 லட்சத்து 39 ஆயிரத்து 329 ஆக உயர்ந்தது. அதே நேரம் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 14,629 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது.
தற்போதைய நிலவரப்படி 1,30,713 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,023 அதிகம் ஆகும்.
தொற்று பாதிப்பால் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,25,454 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று 11,44,145 டோஸ்களும், இதுவரை 198 கோடியே 88 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.