search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த சுப்ரீம் கோர்ட்: காரணம் என்ன?
    X

    பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த சுப்ரீம் கோர்ட்: காரணம் என்ன?

    • பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய மீறலை சுப்ரீம் கோர்ட் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.

    தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள சுப்ரீம் கோர்ட், எதிர்காலத்தில் பத்திரிகைகளில் அறிக்கைகள் வெளியிடுவதை பதஞ்சலி நிறுவனம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

    Next Story
    ×