என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் பிரதமர் நேரு குறித்து ஆபாசமாக பேசிய ஸ்டாண்ட் அப் காமெடியன் - வலுக்கும் கண்டனம்
    X

    முன்னாள் பிரதமர் நேரு குறித்து ஆபாசமாக பேசிய ஸ்டாண்ட் அப் காமெடியன் - வலுக்கும் கண்டனம்

    • பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில் பேசினார்.
    • இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

    ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசி இளைஞர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில், ஜவகர்லால் நேருவையும், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியையும் தொடர்புபடுத்தியும், காந்தி Father of the nation என்றும் நேரு daddy of the nation என்றும் பேசியுள்ளார்.

    மேலும் பல இடங்களில் நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

    இதன் வீடியோவானது இணையத்தில் பரவிய நிலையில் பாலாஜியின் தரக்குறைவான பேச்சுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×