என் மலர்
இந்தியா

திடீர் உடல்நலக் குறைவு: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
- சோனியா காந்தி தலைநகர் டெல்லியின் சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






