என் மலர்tooltip icon

    இந்தியா

    தூக்கில் தொங்கிய 10-ம் வகுப்பு மாணவன்.. அதே கயிற்றில் தந்தையும் தற்கொலை.. ஸ்மார்ட்போனால் வந்த வினை
    X

    தூக்கில் தொங்கிய 10-ம் வகுப்பு மாணவன்.. அதே கயிற்றில் தந்தையும் தற்கொலை.. ஸ்மார்ட்போனால் வந்த வினை

    • ஓம்கார் தனது தந்தையிடம் ஸ்மார்ட்போன் கேட்டு விடாப்பிடியாக இருந்துள்ளார்.
    • மனமுடைந்த ஓம்கார் வீட்டை விட்டு சென்றார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் 10-வது படித்து வந்த ஓம்கார் (16) தனது தந்தையிடம் படிப்பிற்காக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணப் பிரச்சனை காரணமாக அவனது தந்தையால் ஸ்மார்ட்போனை வாங்க முடியவில்லை.

    ஓம்கார் தனது தந்தையிடம் ஸ்மார்ட்போன் கேட்டு விடாப்பிடியாக இருந்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை மீண்டும் பிரச்சினையை எழுப்பினார்.

    பண்ணை மற்றும் வாகனத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதால், ஸ்மார்ட்போன் வாங்க இயலவில்லை என்று அவனது தந்தை கூறினார்.

    இதனால் மனமுடைந்த ஓம்கார் வீட்டை விட்டு சென்றார். அவன் பண்ணைக்குச் சென்றதாக அவரது குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் அவன் மறுநாள் காலை வரை திரும்பாததால் தீவிரமாக தேடி வந்தனர்.

    இதையடுத்து பண்ணைக்கு வந்த விவசாயி, மரத்தில் தூக்கில் தொங்கியபடி மகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். துக்கத்தில் மூழ்கிய அவர், தனது மகனின் உடலை அவிழ்த்துவிட்டு, விரக்தியில் அதே கயிற்றை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இறந்த மகன் ஓம்கார் 3 சகோதரர்களில் இளையவர். மகர சங்கராந்தியைக் கொண்டாட லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிரில் உள்ள தனது விடுதியில் இருந்து வீடு திரும்பினார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு இருவரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×