சீதாராம் யெச்சூரி உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீதாராம் யெச்சூரி உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு
Published on: 

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாரம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

முன்னதாக, பொதுமக்கள் அஞ்சலிக்காக சிபிஎம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து, பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

நுரையீரல் தொற்று பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.

இந்நிலையில், ஆராய்ச்சி, பயிற்சி நோக்கங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com