என் மலர்
இந்தியா

சோனியா காந்தி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
- சோனியா காந்தி டெல்லியின் சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், சோனியா காந்தி வயிற்றுத் தொற்றில் இருந்து நன்கு குணமடைந்து வருகிறார். சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது டிஸ்சார்ஜ் தேதி இன்னும் முடிவாகவில்லை
என சர் கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.
Next Story






