search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவை வளர்ச்சிக்காக ஒப்பந்தம் எடுத்துள்ளேன்: எதிர்க்கட்சிகளுக்கு ஏக்நாத் ஷிண்டே பதிலடி
    X

    மகாராஷ்டிராவை வளர்ச்சிக்காக ஒப்பந்தம் எடுத்துள்ளேன்: எதிர்க்கட்சிகளுக்கு ஏக்நாத் ஷிண்டே பதிலடி

    • எதிர்க்கட்சிகள் ஏக்நாத் ஷிண்டேவை ‘ஒப்பந்த முதல்-மந்திரி’ என கிண்டல் செய்து வருகின்றனர்.
    • எனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள், சித்தாந்தம் மங்கிப்போன தன்மைக்கு அடையாளம்.

    மும்பை

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டவிரோதமானது என சிவசேனா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் முதல்-மந்திரியை 'ஒப்பந்த முதல்-மந்திரி' என கிண்டல் செய்து வருவதாக தெரிகிறது.

    இந்தநிலையில் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எனது எதிரிகளால் நான் அடிக்கடி 'ஒப்பந்த முதல்-மந்திரி' என்று வர்ணிக்கப்படுகிறேன். மத்திய மந்திரி நாராயண் ரானே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் நான் மக்கள் நலனை மட்டுமே எனது செயல்திட்டமாக வைத்து இருக்கிறேன்.

    எனவே மாநிலத்தை வளர்ச்சி, செழிப்பு மற்றும் மக்களின் நலனுக்காக நான் ஒப்பந்தம் எடுத்துள்ளேன் என்று கூறிக்கொள்கிறேன். காட்டிக்கொடுப்பவன் என எனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள், சித்தாந்தம் மங்கிப்போன தன்மைக்கு அடையாளம் ஆகும்.

    சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்திற்கும், மக்கள் ஆணைக்கும் எதிராக, அதிகாரத்திற்காக கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இயற்கைக்கு மாறான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டது யார்?

    சிவசேனா அதிருப்தி அணியை திரட்டியதன் மூலம் அரசியலமைப்புக்கு எதிராகவோ அல்லது சட்ட விரோதமாகவோ எதையும் நான் செய்யவில்லை. தவறை நான் திருத்தினேன்.

    சித்தாந்தம் மங்கிய தன்மைக்கு எனது பணிகளின் மூலம் நான் பதில் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் ஹலோ என்ற வார்த்தைக்கு பதில் வந்தே மாதரம் என்று கூறுமாறு கூறியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு பதில் அளித்த அவர், "வந்தே மாதரம் கூறியபடி நமது சுதந்திர போராட்ட வீரர்கள் தூக்கு மேடைக்கு சென்றனர்.

    நான் தொலைபேசியில் பதிலளிக்கும்போது ஹலோ சொல்ல வேண்டாம் என்று கேட்டதற்கு ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்" என்றார்.

    Next Story
    ×