search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் ஷர்மிளா தனித்து போட்டி: காங்கிரசில் இணையும் முடிவை கைவிட்டார்
    X

    தெலுங்கானாவில் ஷர்மிளா தனித்து போட்டி: காங்கிரசில் இணையும் முடிவை கைவிட்டார்

    • சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு எதிராக நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
    • அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு எதிராக நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அவரது கட்சியை காங்கிரசுடன் இணைக்க கட்சி மேலிடம் ஆர்வம் காட்டியது.

    இதையடுத்து கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஷர்மிளாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஷர்மிளா தனக்கு மாநில தலைவர் பதவி வழங்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஷர்மிளாவின் கோரிக்கைக்கு தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த ஷர்மிளா தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட்டார்.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஷர்மிளா தனித்து போட்டியிடுகிறார்.

    அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

    மேலும் தனது கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அடுத்த வாரம் முதல் மனு அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×