search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி பொதுக்கூட்டத்திற்கு சந்தேஷ்காளி பெண்களை வரவிடாமல் தடுத்த மேற்கு வங்காள போலீசார்
    X

    பிரதமர் மோடி பொதுக்கூட்டத்திற்கு சந்தேஷ்காளி பெண்களை வரவிடாமல் தடுத்த மேற்கு வங்காள போலீசார்

    • பிரதமர் மோடி கொல்கத்தாவில் இன்று நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
    • பர்கனாஸ் 24 மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான், 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக சொத்துகளை பறித்தல், பணம் பறித்தல், கூட்டு பலாத்காரம் செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அங்குள்ள பெண்கள் குற்றம் சாட்டினர். மேலும், தெருக்களில் ஆயுதங்களுடன் களம் இறங்கி போராடியதால் ஷேக் ஷாஜகானுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பாதையை திறந்து வைத்து, ரெயில் பயணம் செய்தார்.

    அதனைத் தொடர்ந்து 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் என்ற இடத்தில் உள்ள கச்சாரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் சந்தேஷ்காளியில் உள்ள பெண்களை கலந்து கொள்ள பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. சந்தேஷ்காளியில் உள்ள பெண்கள் பேருந்துகளில் பராசத் பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது போலீசார் பல்வேறு இடங்களில் அவர்களை தடுத்து நிறுத்தனர்.

    தங்களை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்? என அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு நெறிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக தடுத்து நிறுத்தப்படுவதாக தெரிவித்தனர்.

    சந்தேஷ்காளியில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. முதலில் பேருந்துகள் நியூ டவுனில் உள்ள பிஸ்வா பங்க்ளாவில் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் பராசத் செல்லும் வழியில் ஏர்போர்ட் கேட் 1-ல் தடுத்து நிறுத்தப்பட்டது. பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பை காரணம் சாட்டி தடுத்து நிறுத்தினர் என பேருந்தில் இருந்த பா.ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    ஆனால், பிரதமர் மோடி இந்த வழியாக பராசத் செல்ல இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் தடுத்து நிறுத்தப்பட்டது என விளக்கம் அளித்தது.

    கைது செய்யப்பட்டுள்ள ஷேக் ஷாஜகானை சிபிஐ-யிடம் ஒப்படைக்க மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அம்மாநில போலீசார் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் ஒப்படைக்க முடியாது என சிபிஐ-யிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×