என் மலர்
இந்தியா

பெங்களூருவில் விபத்து: பள்ளி மாணவர்கள் 4 பேர் பலி
- நள்ளிரவு சுற்றுலா முடிந்து மீண்டும் குழந்தைகளை பள்ளி வாகனத்தின் மூலம் வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.
- உழவு எந்திரம் பள்ளி வாகனம் மீது மோதியது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜமகண்டி தாலுகா அழகரு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் நேற்று நள்ளிரவு சுற்றுலா முடிந்து மீண்டும் குழந்தைகளை பள்ளி வாகனத்தின் மூலம் வீடுகளுக்கு அழைத்து சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் பள்ளி குழந்தைகள் சென்ற வாகனம் ஜமகண்டி தாலுகாவில் உள்ள அழகரு கிராமத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த உழவு எந்திரம் பள்ளி வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் ஸ்வேதா பாட்டில் (13), சாகர் கடகோலா (17), கோவிந்த ஜம்பகி (13), பசவராஜ் கோடகி (17) ஆகியோர் பலியானார்கள். மேலும் சில குழந்தைகள் காயமடைந்தனர்.
சுற்றுலா சென்ற பள்ளி குழந்தைகள் வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






