என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
    X

    தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

    • தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெற்று வந்தன.
    • திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யபோதிலும், அதன்மூலம் பெறப்பட்ட நிதி பறிமுதல் செய்யப்படும் என தீர்ப்பில் கூறப்படவில்லை.

    உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் திட்டத்தை கடந்த ஆண்டு ரத்து செய்தது. இதனால் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற 16,518 கோடி ரூபாயை பறிமுதல் செய்ய உத்தரவிடும் வகையில் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என கெம் சிங் பதி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இது தொடர்பான நிலுவையில் மனு ஏதும் இருந்தால் அவைகளும் தள்ளுபடி செய்யப்படும்" எனத் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்டு அரசியலமைப்பு பெஞ்ச், தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.பி.ஐ. வங்கி தரவுகளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைந்தது. அப்போது நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் 16,518 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றது தெரியவந்தது.

    Next Story
    ×