என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணை- அமைச்சர் முரளிதர் மோஹுல்
    X

    அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணை- அமைச்சர் முரளிதர் மோஹுல்

    • அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
    • விமான விபத்தில் மொத்தம் 260 உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்த நிலையில், கல்லூரி விடுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலகையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஒன்றிய அமைச்சர் முரளிதர் மோஹுல் தெரிவித்துள்ளார்.

    ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பிளாக் பாக்ஸ்-ல் இருந்து கிடைத்த ரெகார்டிங் அடிப்படையில், பல கோணத்தில் பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.

    Next Story
    ×