என் மலர்
இந்தியா

மேற்குவங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை- மம்தா பானர்ஜி அறிவிப்பு
- புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசாங்கம் கவனித்துக் கொள்ளும்
- ஓராண்டிற்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான 'ஷ்ரமஸ்ரீ' என்ற திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேற்கு வங்கத்தில் வேலை கிடைக்கும் வரையிலோ அல்லது ஓராண்டிற்கோ இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் என்று அத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் சுமார் 22 லட்சம் மேற்குவங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் 'துன்புறுத்தப்படுகிறார்கள்' என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






