என் மலர்tooltip icon

    இந்தியா

    எழுந்தால் ஒரே போடு.. நீதிபதி வீட்டில் நடந்த கொள்ளை - உயிரை காத்த தூக்கம் - அதிர்ச்சி வீடியோ
    X

    எழுந்தால் ஒரே போடு.. நீதிபதி வீட்டில் நடந்த கொள்ளை - உயிரை காத்த தூக்கம் - அதிர்ச்சி வீடியோ

    • படுக்கை அறையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்தது.
    • வெறும் 4 நிமிடம் 10 நொடிகளில் கொள்ளையை அரங்கேற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீதிபதி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, தலைநகர் இந்தூரில் உள்ள ரமேஷ் கார்க் உடைய வீட்டுக்குள் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நுழைந்து படுக்கை அறையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்தது.

    ஒரு திருடன் நகைகளை எடுத்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு திருடன் இரும்புக் கம்பியை அங்கு படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த நீதிபதியின் மகன் ரித்விக் -ஐ நோக்கி நீட்டியபடி இருந்தான்.

    ரித்விக் ஒருவேளை தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தால் அவரை அந்த கம்பியால் தாக்க திருடன் தயாராக இருந்தது அறையின் சிசிடிவி வீடியோவில் தெரிந்தது.

    வெறும் 4 நிமிடம் 10 நொடிகளில் கொள்ளையை அரங்கேற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. ஜன்னல் இரும்பு கிரில் கதவை வெட்டி அவர்கள் உள்ளே நுழைந்தது தெரியவந்தது.

    சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×