என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுங்கள்: ராகுல் காந்திக்கு பாஜக பதில்
    X

    தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுங்கள்: ராகுல் காந்திக்கு பாஜக பதில்

    • மீடியாக்கள் முன்னதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறி வருகிறார்.
    • ஆனால், எழுத்துப்பூர்வமாக அதாரங்களை கொடுக்க மறுக்கிறார்.

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி, தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருடப்பட்டதாக குற்றம்சாட்டி வருகிறார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றால் ராகுல் காந்தி மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தேசிய செய்தி தொடர்பாக கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவுரவ் பாட்டியா கூறியதாவது:-

    மீடியாக்கள் முன்னதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறி வருகிறார். ஆனால், எழுத்துப்பூர்வமாக அதாரங்களை கொடுக்க மறுக்கிறார்.

    ராகுல் காந்தி, நீங்கள் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால், உச்சநீதிமன்ற கருத்துகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால் முதல் விசயமாக நீங்கள் உங்களுடைய மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுங்கள். பிரியங்கா காந்தியும் ராஜினாமா செய்யலாம். தார்மீக அடிப்படையில் சோனியா காந்தியும் ராஜினாமா செய்யலாம். தேர்தல் ஆணையத்தின் மீது நீங்களும் அது குற்றச்சாட்டை எழுப்புகிறீர்கள்.

    அதன்பின் நீங்கள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம, மக்களிடம் செல்லுங்கள். உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ, அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். எது சிரமமாக இருக்கிறதோ, அதை நீங்கள் நிராகரித்து தேர்தல் ஆணையத்தின் மீது அவதூறுகளைப் போடுகிறீர்கள். இது வேலை செய்யாது. நம்பிக்கை வைக்காத கர்நாடகம், இமாச்சல பிரதேசம், தெலுங்கான முதல்வர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு கவரவு பாட்டியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×