என் மலர்tooltip icon

    இந்தியா

    விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
    X

    விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    • புதிய 20 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின் கையெழுத்து இடப்பட்டதாக இருக்கும்.
    • புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும்.

    புதுடெல்லி:

    நாட்டில் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த இந்த நோட்டில் மகாத்மா காந்தி படம் இருக்கும்.

    இது போன்ற நோட்டுகளை ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.

    இந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின் கையெழுத்து இடப்பட்டதாக இருக்கும். மற்றபடி வேறெந்த மாற்றங்களும் இதில் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடி ஆகும் என்ற தகவலையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×