என் மலர்
இந்தியா
மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
- பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
- ரத்தன் டாடா சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது.
இந்தநிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.
பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். 2012-ல் அவர் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.
Live Updates
- 10 Oct 2024 2:54 PM IST
மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அஞ்சலி செலுத்தினார்.
- 10 Oct 2024 2:54 PM IST
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மரியாதை செலுத்தினார்.
- 10 Oct 2024 2:35 PM IST
மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
- 10 Oct 2024 2:25 PM IST
ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரத்தன் டாடாவை நினைவு கூர்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- 10 Oct 2024 2:17 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரத்தன் டாடாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
- 10 Oct 2024 1:54 PM IST
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், “இன்று முழு நாட்டிற்கும் சோகமான நாள், இந்தியாவின் உண்மையான மகன் ரத்தன் டாடா நம்மிடையே இல்லை... அவரது வாழ்க்கை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
- 10 Oct 2024 1:50 PM IST
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து பாஜக எம்பியும், நடிகருமான ரவி கிஷன் கூறுகையில், ரத்தன் டாடா ஜியைப் போன்ற வலிமையான குணம் கொண்டவர்கள் மிகக் குறைவு. அவர் தொலைநோக்கு பார்வையுடையவர் மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார் என தெரிவித்துள்ளார்.
- 10 Oct 2024 1:22 PM IST
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆத்தியா தாக்கரே, அனில் தேசாய் மற்றும் அரவிந்த் சாவந்த் ஆகியோருடன் வந்து ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
- 10 Oct 2024 1:17 PM IST
மறைந்த ரத்தன் டாடா உடலுக்கு இஷா அம்பானி தனது கணவருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
- 10 Oct 2024 1:00 PM IST
ரத்தன் டாடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.













