என் மலர்
இந்தியா

டெல்லி கார் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும் - ராஜ்நாத் சிங்
- நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
- டெல்லி கார் வெடிப்பு விபத்தில் தொடர்புடையவர்களை தப்பிக்க விட மாட்டோம்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
* குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
* கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உண்மை மக்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும்.
* டெல்லி கார் வெடிப்பு விபத்தில் தொடர்புடையவர்களை தப்பிக்க விட மாட்டோம்.
* டெல்லி கார் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






