என் மலர்tooltip icon

    இந்தியா

    முப்படைத் தலைமைத் தளபதிக்கு புதிய அதிகாரம் வழங்கி ராஜ்நாத் சிங் உத்தரவு
    X

    முப்படைத் தலைமைத் தளபதிக்கு புதிய அதிகாரம் வழங்கி ராஜ்நாத் சிங் உத்தரவு

    • சமீபத்திய முடிவு இந்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரிகிறது.
    • இது ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்திற்கான ஒரு முக்கிய படியாகும்.

    நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் மத்திய அரசு முக்கிய சீர்திருத்ததை மேற்கொண்டுள்ளது.

    ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.

    அதன்படி, மூன்று படைகளுக்கும் கூட்டு உத்தரவுகள் மற்றும் வழிமுறைகளை வெளியிடும் அதிகாரம் முப்படைத் தலைமை தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

    முன்னதாக, ஒவ்வொரு படை வாரியாக அறிவுறுத்தல்கள் அல்லது வழிமுறைகளை தனித்தனியாக வெளியிடும் நடைமுறை இருந்தது.

    சமீபத்திய முடிவு இந்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரிகிறது.

    பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளுக்கும் பொதுவான அறிவுறுத்தல்கள் மற்றும் பொதுவான உத்தரவுகளை பிறப்பிக்க முப்படைத் தலைமை தளபதி (அனில் சவுகான்) மற்றும் இராணுவ விவகாரத் துறை செயலாளருக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். இது ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கல் மற்றும் மாற்றத்திற்கான ஒரு முக்கிய படியாகும்" என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×