என் மலர்
இந்தியா

ராஜ்நாத் சிங் உடல்நிலை சீராக உள்ளது- எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்
- ராஜ்நாத் சிங்குக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது.
- ராஜ்நாத் சிங் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை ஊடகப்பிரிவு பொறுப்பாளர் டாக்டர் ரிமா டாடா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு (வயது 73) நேற்று அதிகாலையில் கடுமையான முதுகு வலி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர் டாக்டர் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை ஊடகப்பிரிவு பொறுப்பாளர் டாக்டர் ரிமா டாடா கூறியுள்ளார்.
ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story






