என் மலர்
இந்தியா

ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்து 15 பேர் உயிரிழப்பு- சந்திரபாபு நாயுடு இரங்கல்
- தீவிபத்தின் போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர்.
- பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தின் போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட போது பலரும் அவசர கால கதவு வழியே குதித்து தப்பியுள்ளனர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து தீயை உடனடியாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே, பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.






