என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜப்பான், சீனா சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடி!
    X

    ஜப்பான், சீனா சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடி!

    • 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
    • சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    ஜப்பான் மற்றும் சீனாவுக்கு 4 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 28 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

    முதலில் ஜப்பான் சென்றடைந்த மோடி, தலைநகர் டோக்கியோவில் நடந்தேறிய 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.

    ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    2 நாள் ஜப்பான் பயணத்தை முடித்த மோடி தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க தனியார் விமானம் மூலம் அங்கிருந்து சீனா சென்றார். தியான்ஜின் விமான நிலையத்தில் நேற்று அவருக்கு சிவப்பு கம்பல வரவேற்பு வழங்ப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    இதன்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாநாட்டை நிறைவடைந்த பின் மோடி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து தனி விமானத்தில் மீண்டும் டெல்லி புறப்பட்டார். இன்று இரவு 7.45 மணியளவில் நாடு திரும்பிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    Next Story
    ×