என் மலர்
இந்தியா

கீர்த்தி சக்ரா மற்றும் 33 பேருக்கு வீரதீர விருது வழங்கினார் ஜனாதிபதி முர்மு
- ஜனாதிபதி திரவுபதி முர்மு 33 பேருக்கு வீரதீர விருதுகளை வழங்கினார்.
- விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்,2025-ம் ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை முதலீட்டு விழா நடந்தது.
இந்நிலையில், பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேச போலீசார் 4 பேர் உள்பட மொத்தம் 33 பேருக்கு வீரதீர விருதுகள் வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார். மேலும் 6 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதும் வழங்கப்பட்டது.
துணிச்சலாக செயல்பட்டதை பாராட்டும் வகையில் வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
'பாதுகாப்பு படையினர் துணிச்சலாக செயல்பட்டதன் மூலம் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன' என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது..
Next Story






