என் மலர்
இந்தியா

முதல் மந்திரி ஆவது எனது கனவல்ல, அது வேறு: பிரசாந்த் கிஷோர்
- நான் 10 முதல் மந்திரிகளை உருவாக்க முயற்சி செய்துள்ளேன்.
- என் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த கடின உழைப்பைச் செய்கிறேன்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அம்மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. கூட்டணியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் தீவிரமாக உள்ளன. இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் மக்களைச் சந்தித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
சிலர் நான் முதல் மந்திரியாக வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் என்னை அறிய மாட்டீர்கள். நான் 10 முதல் மந்திரிகளை உருவாக்க முயற்சித்தேன். இன்று நான் முதல் மந்திரியாக வேண்டும் என்பதற்காக அல்ல, என் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த கடின உழைப்பைச் செய்கிறேன்.
எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வேலைக்காக பீகாருக்கு வரும்போது பீகார் வளர்ச்சி அடைந்ததாக நான் கருதுவேன் என தெரிவித்தார்.






