என் மலர்
இந்தியா

மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
- ஐந்து நாள் சுற்றுப் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா சென்றார்.
- பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்திய பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
முதலில் நைஜீரியா சென்ற அவர், அங்கிருந்து ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் சென்றார். பிரேசிலில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அங்கிருந்து கயனா சென்றார்.
இந்த நிலையில் கயானா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டுள்ளார்.
ஐந்து நாள் பயணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா சென்றடைந்தார். கடந்த 17 வருடத்தில் நைஜீரியா சென்ற முதல் பிரதமர் மோடி ஆவார். அங்கு நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபு உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்திய சமூகத்தினருடன் உரையாடினார். நைஜீரியானாவின் உயரிய விருது (the Grand Commander of the Order of the Niger) பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
பின்னர் பிரேசில் சென்று ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து பேசினார். அத்துடன் ஏராளமான உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் கயானா சென்றார். 50 வருடத்தில் கயானா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.
அங்கு நடைபெற்ற 2-வது இந்தியா-காரிகோம் மாநட்டில் கலந்து கொண்டார். இங்கு கயானா நாட்டின் உயரிய விருது மோடிக்கு வழங்கப்பட்டது. கயானா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.