என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய விமானப்படை தினம்- வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
    X

    பிரதமர் மோடி

    இந்திய விமானப்படை தினம்- வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

    • அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அதன்படி, 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், விமானப்படை தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விமானப்படை தினத்தில் துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    இந்திய விமானப்படை பல தசாப்தங்களாக விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் தேசத்தைப் பாதுகாத்துள்ளனர் மற்றும் பேரழிவுகளின் போது குறிப்பிடத்தக்க பணிகளைக் காட்டியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×