search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜாபர் சாதிக் வீட்டை பயன்படுத்த அனுமதி: டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவு
    X

    ஜாபர் சாதிக் வீட்டை பயன்படுத்த அனுமதி: டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவு

    • சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டை சோதனையிட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.
    • ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? எந்த சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும் சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டை சோதனையிட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.

    சென்னையில் உள்ள தனது வீட்டை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சீல் வைத்ததற்கு எதிராக ஜாபர் சாதிக் சார்பில் வக்கீல் எஸ்.ஹரிகரன் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை டெல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாபர் சாதிக் சார்பில் வக்கீல்கள் எஸ்.ஹரிகரண், டி.ஆர்.பிரபாகரன் ஆகியோர் ஆஜரானார்கள்.

    ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? எந்த சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சார்பில் ஆஜரான அரசு தரப்பு வக்கீல் முகேஷ் மலிக், ஜாபர் சாதிக்கின் வீட்டிலிருந்து எதுவும் திருடு போய் விடக்கூடாது என்ற நோக்கத்திலேயே அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டதாகவும், அதைத் திறந்து தற்போது பயன்படுத்திக் கொள்ள எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் பதிலளித்தார்.

    இதையடுத்து ஜாபர் சாதிக்கின் வீட்டை வழக்கம் போல பயன்படுத்த அனுமதி அளித்த நீதிபதி, மனுவை முடித்து வைத்து வைத்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×