என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத்தில் உள்ள ரோஹிங்கியாக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்- பவன் கல்யாண் எச்சரிக்கை
    X

    ஐதராபாத்தில் உள்ள ரோஹிங்கியாக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்- பவன் கல்யாண் எச்சரிக்கை

    • பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் மீது ஒரு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    திருப்பதி:

    பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சிந்தூர் ஆபரேஷன் குறித்து ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கூறியதாவது:-

    பஹல்காம் தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த 2 பேர் இறந்து உள்ளனர். பயங்கரவாதிகளின் தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது பாராட்டத்தக்கது.

    பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் மீது ஒரு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    இந்த நேரத்தில் கட்சி வேறுபாடுகளை மறந்து மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். சமூக வலைதளங்களில் சிந்தூர் ஆபரேஷன் குறித்து நாட்டிற்கு எதிராக கருத்து தெரிவிக்க கூடாது.

    செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் விருப்பப்படி பேசக்கூடாது. எல்லை மீறினால் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்.

    பிரதமர் மோடி தலைமையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடந்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    மியான்மரில் நடந்து வரும் உள்ளூர் போர் காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி பல்வேறு நகரங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.

    அவர்களால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள ரோஹிங்கியாக்களை தொடர்ந்து மாநில அரசு கண்காணிக்க வேண்டும்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கானா முதல் மந்திரி இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×