என் மலர்
இந்தியா

சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- அமெரிக்கா கடந்த 48 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
- இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் "இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.






