என் மலர்tooltip icon

    இந்தியா

    பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி  மவுன அஞ்சலி
    X

    பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி

    • ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
    • பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 54 ஆயிரம் பயனாளிகளுக்கு அவர் வீடுகளின் சாவிகளையும் வழங்குகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பீகார் மாநிலம் சென்றார். 11.45 மணியளவில் அவர் மது பானியில் நடந்த தேசிய பஞ்சாயத்துராஜ் தின நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் தேசிய பஞ்சாயத்து விருதுகளையும் வழங்கினார்.

    அதை தொடர்ந்து ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் பீகாரில் அம்ரித் பாரத், நமோ பாரத் விரைவு ரெயில் சேவைகளையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 54 ஆயிரம் பயனாளிகளுக்கு அவர் வீடுகளின் சாவிகளையும் வழங்குகிறார்.

    பீகார் மாநிலத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×