என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியரின் பெருமை.. மன் கி பாத்தில் பிரதமர் பெருமிதம்
    X

    ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியரின் பெருமை.. மன் கி பாத்தில் பிரதமர் பெருமிதம்

    • நமது படைகள் வெளிப்படுத்திய வீரம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளது.
    • நமது பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அனைவரின் வியர்வை உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் மக்களிடம் பேசினார்.

    அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பேசியதாவது, "இன்று முழு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. இன்று ஒவ்வொரு இந்தியனின் உறுதிமொழியும் இதுதான், நாம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். சிந்தூர் நடவடிக்கையின் போது நமது படைகள் வெளிப்படுத்திய வீரம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளது.

    எல்லையைத் தாண்டி பயங்கரவாதிகளின் மறைவிடங்களை நமது ராணுவம் அழித்த துல்லியம் அசாதாரணமானது. சிந்தூர் நடவடிக்கை வெறும் இராணுவப் நடவடிக்கை மட்டுமல்ல. நமது உறுதிப்பாடு, தைரியம் மற்றும் மாறிவரும் இந்தியாவின் நடவடிக்கை. இந்தப் நடவடிக்கை முழு நாட்டையும் தேசபக்தியின் உணர்வால் நிரப்பி, மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் வரைந்துள்ளது.

    நமது வீரர்கள் பயங்கரவாத தளங்களை அழித்தார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தி பயன்படுத்தப்பட்டது.

    இந்த வெற்றியில் நமது பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அனைவரின் வியர்வை உள்ளது. சிந்தூர் நடவடிக்கை நாட்டு மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல குடும்பங்கள் அதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளன. பீகாரில் உள்ள கதிஹார், உ.பி.யில் உள்ள குஷிநகர் மற்றும் பல நகரங்களில், பிறந்த குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயரிடப்பட்டது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×