search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒருவர் முதல்-மந்திரி ஆக அனைத்து சமூகங்களின் ஆதரவு தேவை: மந்திரி சுதாகர்
    X

    ஒருவர் முதல்-மந்திரி ஆக அனைத்து சமூகங்களின் ஆதரவு தேவை: மந்திரி சுதாகர்

    • எந்த ஒரு சமூகத்தையும் புண்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது.
    • மத்திய விசாரணை அமைப்புகள் சட்டப்படி செயல்படுகின்றன.

    பெங்களூரு:

    கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதா மக்களால் வளர்ந்த கட்சி. மக்களின் நன்மைக்காக எங்கள் கட்சி பணியாற்றுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் எங்களால் எந்த திட்டத்தையும் அமல்படுத்த முடியவில்லை.

    பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஓராண்டு முடிவடைவதையொட்டி சாதனை விளக்க மாநாடு தொட்டபள்ளாபுராவில் 28-ந் தேதி (நாளை) நடத்துகிறோம். இந்த மாநாட்டில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களால் பயன் பெற்ற பயனாளிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஒரு சமூகத்தின் ஆதரவால் மட்டும் ஒருவர் முதல்-மந்திரி ஆக முடியாது. ஒருவர் முதல்-மந்திரி ஆக அனைத்து சமூகங்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. எந்த ஒரு சமூகத்தையும் புண்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது.

    ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. ஒக்கலிகர்கள் குறித்து பேசியுள்ளார். இது சரியல்ல. இது காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒக்கலிகர்கள் விவசாய தொழிலை அதிகம் செய்கிறார்கள். மத்திய விசாரணை அமைப்புகள் சட்டப்படி செயல்படுகின்றன.

    நாட்டை 54 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், அந்த அமைப்புகளை தவறாக பயன்படுத்தவில்லையா?. மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவரிடம் 10 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். அமித்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது பா.ஜனதா போராட்டம் நடத்தவில்லை.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    Next Story
    ×