என் மலர்
இந்தியா

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,634 ஆக உயர்வு
- ஒரே நாளில் புதிதாக 111பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
- ஜெ.என்-1 வகை கொரோனா பரவலால் மக்கள் அச்சப்பட வேண்டாம்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஜெ.என்-1 என்ற வகை கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் தினமும் ஏராளமானோருக்கு தொற்று பாதித்து வருவதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 111பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,634 ஆக உயர்ந்திருக்கிறது.
அதே நேரத்தில் கேரளாவில் தற்போதைய கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்நிலையில் ஜெ.என்-1 வகை கொரோனா பரவலால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.






