என் மலர்
இந்தியா

எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு, உயர்மட்டக்குழு ஆசி இல்லாமல் யாரும் முதல்வராக முடியாது: சித்தராமையா
- சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று அடுத்த மாதத்துடன் இரண்டரை வருடம் நிறைவடைகிறது.
- அதன்பின் டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. அதன்பின் டி.கே. சிவக்குமார் முதல்வராகலாம் என பேச்சு அடிபட்டு வருகிறது. இதை நவம்பர் புரட்சி என்று குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையே உயர்மட்டக் குழு முடிவின் அடிப்படையில் மாநிலத்தின் தலைமையத்துவத்தை மாற்ற முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சித்தராமையா பதில் அளித்து கூறியதாவது:-
இது போன்ற விசயங்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. காங்கிரசின் உயர்மட்டக் குழுதான் உயர்ந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்டுக் குழுவின் கருத்துகள் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமானது. சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகள் இல்லாமல் யாரும் முதல்வராக முடியாது. மெஜாரிட்டி (சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு) இருந்தால் மட்டுமே முதல்வராக முடியும். உயர்மட்டக் குழுவின் ஆசிர்வாதமும் தேவையானது. அங்கே புரட்சியும் இல்லை. மாயையும் இல்லை.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.






