search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடை நீக்கம்: சித்தராமையா அதிரடி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடை நீக்கம்: சித்தராமையா அதிரடி

    • சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
    • பள்ளிகள், கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என முதல் மந்திரி அறிவித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பா.ஜ.க. முதல் மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்படுவதாக முதல் மந்திரி சித்தராமைய்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சித்தராமையா கூறுகையில், எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதை நான் ஏன் தடுக்கவேண்டும்? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவின் மகனும், கர்நாடக பா.ஜ.க. தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலை செய்கிறது என்றார்.

    Next Story
    ×