என் மலர்
இந்தியா

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்
- தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.
- மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
2025-2026 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.
இந்த நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியட்டது தேசிய தேர்வு முகமை. தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதில் "NEET UG 2025 Result" என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இதன்பிறகு வரும் இணைய பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வர்ட் போட்டு சமர்ப்பித்தால், மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.