பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் மகாத்மா காந்தியின் இந்தியாவுக்கு நல்லதல்ல: மெகபூபா முப்தி விமர்சனம்

பிரதமர் மோடியின் பயணம் நம் நாட்டின் கொள்கைக்கு எதிரானது.இன்று, ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக உள்ளது.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் மகாத்மா காந்தியின் இந்தியாவுக்கு நல்லதல்ல: மெகபூபா முப்தி விமர்சனம்
Published on

இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள அவருக்கு அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தலைமையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் இருநாட்டு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இஸ்ரேல் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (PDP) தலைவருமான மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது:-

பிரதமர் மோடியின் பயணம் நம் நாட்டின் கொள்கைக்கு எதிரானது. இன்று, ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக உள்ளது. சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது. கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அவர் பல நாடுகளுக்கு செல்லாமல் உள்ளார்.

140 கோடி மக்களின் பிரதிநிதியான பிரதமர் மோடி, இஸ்ரேல் சென்று குற்றவாளியை கட்டி பிடிக்கிறார். அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது காந்தியின் இந்தியாவான நம்முடைய நாட்டிற்கு நல்லது அல்ல என்று நினைக்கிறேன்.

இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com