என் மலர்
இந்தியா

சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி வேந்தர் ஃபிரெட்ரிக் மெர்ஸ்
- ஜெர்மனி வேந்தர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ஃபிரெட்ரிக் மெர்ஸ் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்து காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனி வேந்தர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜெர்மனி வேந்தர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தடைந்தார்.
இன்று பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி நாட்டின் வேந்தர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்து காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றத்தில், பிரதமர் மோடி, ஜெர்மனி வேந்தர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் இரு நாடுகளைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இன்று அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இதில், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.






