என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. எடியூரப்பா மீதான போக்ஸோ வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
    X

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. எடியூரப்பா மீதான போக்ஸோ வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

    • தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
    • விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நவம்பர் 13 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடியூரப்பா தனது வீட்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சதாசிவ நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பின்னர் அதை சிஐடியிடம் ஒப்படைத்தனர்.

    சிஐடி போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    இருப்பினும், உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்ததால், அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து எடியூரப்பாவுக்கு சத்தமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    Next Story
    ×