என் மலர்
இந்தியா

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்: ஆன்லைனில் நாளை நடைபெறுகிறது
- இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19 அன்று நடைபெறுகிறது.
- இதில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கேசி வேணுகோபால், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கே.சி.வேணுகோபால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க, இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
Next Story






